A.P.Mathan / 2011 டிசெம்பர் 10 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலைக்கான நினைவுக்கல் திரைநீக்கம் இன்று மாலை சிறைச்சாலை மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திர சிறி கஜதீரவினால் செய்து வைக்கப்பட்டது.
யாழ். பண்ணையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகள் கொண்ட சிறைச்சாலையாக இது அமையவுள்ளது. 533 மில்லியன் ரூபா செலவில் இச்சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டதோடு இரண்டு வருடங்களில் வேலைத்திட்டம் முழுமையடையும் என சிறைச்சாலை அமைச்சர் சந்திர சிறி கஜதீர தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட நீதிபதி எஸ். பிரேமசங்கர், யாழ். நீதிவான் ஆ.ஆனந்தராஜா, யாழ். மேல் நீதிபதி பரமராஜா மற்றும் சிறைச்சாலை ஆணையாளர், சிறைச்சாலை அமைச்சின் உயர் அதிகாரிகள், யாழ். மாவட்ட அரச அதிபர், யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர், யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.







19 minute ago
24 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
17 Dec 2025
17 Dec 2025