Super User / 2011 டிசெம்பர் 12 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
பிரான்ஸில் சட்ட ரீதியாக புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்கள் பிரான்ஸில் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா ரொபின்சன் தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தன்னை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சமகால அரசியல் தமிழ் மக்களுக்கு விரும்பத்தக்க ஒன்றாக இருக்கிறதா எனவும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் அரசியல் வாதிகளினால் நிறைவேற்றக் கூடியதாக இருக்கிறதா என்பது தொடர்பாகவும் பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா வினவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கு பின்னர் அவர்களின் வாழ்வியல் எவ்விதம் இருக்கிறது என்பது தொடர்பாகவும் பிரான்ஸ் தூதுவர் கேள்வி எழுப்பினார்.
அத்தோடு இனங்களுக்கிடையில் எவ்விதமாக புரிந்துணர்வு காணப்படுகிறது எனவும் சமூகங்களுக்கிடையில் ஒன்றிணைவு தொடர்பிலும் தன்னிடம் பிரான்ஸ் தூதுவர் கேட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

9 hours ago
9 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
17 Dec 2025