Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் எவ்விதம் இணக்கப்பாட்டுடன் அமையப்போகிறதென்பதை அறிவதற்காக ஜக்கிய அமெரிக்கா, கனடா, நோர்வே, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் தன்னுடன் ஒரு வாரமாக தொடர்ந்து சந்தித்து பேசி வருவதாக யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்
யாழ். அரச அதிபர் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளரொருவர் வெளிநாடுகளின் தூதுவர்கள் ஒரு வாரமாக தங்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களது வருகையின் உண்மையான நோக்கம் என்ன? அவர்கள் உங்களிடம் எதைப்பற்றி விவாதிக்கிறார்களெனக் கேட்டார். இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி நிலைமைகள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் தற்போதைய வாழ்க்கை நிலைமை, அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் தற்போதைய நிலைப்பாடுகள்
சமூகங்களின் மீளிணைவு, இணக்கப்பாடு, மக்கள் சார்ந்த அபிவிருத்தியில் மக்கள் திருப்தியடைகின்றார்களா? புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை செய்கின்றார்களா? என்பது தொடர்பாகவும் அவர் ஆராய்கின்றனர். அத்துடன்; அரசாங்க சேவையாளர்கள் மக்களுக்கு திருப்தியான சேவைகளை வழங்குகின்றனராவென்பது தொடர்பில் அவர்கள் நேரில் ஆராய்கின்றனர்' என்றார்.
9 hours ago
9 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
17 Dec 2025