2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ். குருநகரில் இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,தாஸ்)

யாழ். குருநகர் சின்னக்கடை சந்தைப் பகுதியிலுள்ள கடையொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ கனவற்பொல பகுதியைச் சேர்ந்த அப்துல் நாசர் (வயது 30) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டலொன்றில் இவர் பணியாற்றி வந்ததாக பொலிஸார் கூறினர்.

சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா, பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் முகமாக சடலத்தை  யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X