Kogilavani / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் தெடர்பான புவியியல் சார் ஆய்வு கூடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றிலே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான முன்னேற்ற ஆய்வுகள் குறித்தும், இத்தினத்தை எவ்விதம் கொண்டாடுவது தொடர்பாக ஆராயப்பட்டது
இதேவேளை, யாழில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாகவும் பாடசாலை மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக போட்டிப் பரீட்சைகள் நடத்துவது தொடர்பிலும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
அத்தோடு யாழ். மாவட்டத்திற்கு என அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஒரு நோக்கு குறிக்கோள் ஒன்றை உருவாக்கி அதை பிரதோச ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் அனர்த முகாமைத்துவ மாதமாக பிரகடனப்படுத்தி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி யாழில் தேசிய பாதுகாப்பு தினத்தை கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
.jpg)
.jpg)
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025