2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழில் அதி வேகத்தில் செல்லும் வாகனங்களின் உரிமைப் பத்திரம் ரத்து செய்யப்படும் : யாழ்.அரச அதிபர்

Kogilavani   / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழில் அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களினது வாகன உரிமைப் பத்திரம் யாழ்.மாவட்ட செயலகத்தினால் ரத்து செய்யப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் வீதிவிபத்துக்கள் அதிகரித்துள்ளதினால் இந்நடவடிக்கை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
 
இதேவேளை, யாழில் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைளில் யாழ்.பொலிஸாரின் பணிகள் போதுமானதாக இல்லை எனவும் யாழ்;ப்பாணங்களுக்கு வந்துள்ள வர்த்தக நிலையங்களின் பெரியளவிலான கட்டவுட் விளம்பரங்களினால் வீதி விபத்துக்கள் நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு மின்கம்பங்கள் சரியான முறையில் நிலத்தில் புதைக்கப்படாது காணப்படுவதாகவும் விளப்பரங்களில் வாகன வெளிச்சத்தில் எதிர்விiளைவு வெளிச்சத்தை (ரிப்லக்ற்) ஏற்படுத்துவதன் காரணமாகவும் இந்த விபத்துக்கள் நடைபெறுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபை மற்றும் பிரதேச சபைகள் வீதிகளின் ஓரமாக விளம்பரங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கும் போது வீதி விபத்துக்கள் நடைபெறாதவாறு விளம்பரங்களை அமைப்பதற்கு அறிவுரை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X