2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இலவச மருத்துவ முகாம்

Super User   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நாமல் ராஜபக்ஷவின் கிளிநொச்சி அலுவலகத்தில் இரண்டு நாள் இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில்  நடைபெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் இந்தியாவிலிருந்து வருகை தரவுள்ள மருத்துவ குழுவினராலேயே இந்த இலவச மருத்துவ சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது, கண் பரிசோதனை, மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்வும் இடம்பெறுவதோடு ஏற்கெனவே செயற்கை காலுக்கு அளவினை வழங்கியவர்களுக்கான செயற்கை கால் வழங்கப்படுவதோடு புதிதாக செயற்கை கால் தேவையானவர்கள் அன்றைய தினம் கால்களின் அளவினை வழங்கலாம்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X