2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முன்பள்ளி மாணவர்களிடையே கூடிய சுகாதார நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

அடுத்த வருடம் முதல் முன்பள்ளிகளிடையே அதிகூடிய சுகாதார நடவடிக்கைகளை சுகாதாரத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளதாக யாழ். வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளின் பற்சிகிச்சை சுகாதார பொறுப்பதிகாரி வைத்தியர் எழிலரசி தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடவடிக்கைகளிலும் பார்க்க கூடிய முக்கியத்துவமளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களுக்கிடையே சுகாதாரப் பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம் கூடியளவு சுகாதரத்தை அவர்கள் எதிர்காலத்திலும் பின்பற்றுவார்களென்ற அடிப்படையில் இந்நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளதாகவும் வைத்தியர் எழிலரசி குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X