Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் வடமாகாணத்தின் முதல் இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (ஒசுசல) சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜி.மஹிபாலவினால் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினூடாக மருந்துகளை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இது யாழ்ப்பாண மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமெனவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜி.மஹிபால தெரிவித்துள்ளார்.
இத்திறப்பு விழாவில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபன பிரதிநிதிகள், வடமாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்,
'யாழ். குடாநாட்டில் போலி மருந்துகளின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை யாழ். பிராந்திய சுகாதார பணிமனை எடுக்கவுள்ளது.
இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனக் கிளை யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டமையானது யாழ். மக்ளைப் பொறுத்தமட்டிலும் மருத்துவத்துறையைப் பொறுத்தமட்டிலும் ஒரு மைல் கல்லாகும். இக்கிளை மூலம் மக்களுக்கு தரமான மற்றும் நியாயமான விலையில் மருந்துகள் கிடைக்கக் கூடியதாகவிருக்கும்.
கடந்த காலங்களில் பல்வேறு மருந்துகள் பல்வேறு விலைகளில் விற்கப்பட்டு வந்தன. இதனைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமாகவிருந்தது. இன்று இக்கிளை திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நியாயமான விலைகளில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago