2025 மே 17, சனிக்கிழமை

அனலைதீவில் பொலிஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 20 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கவிசுகி)

யாழ். அனலைதீவில் விரைவில் பொலிஸ் நிலையமொன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ். இளவாலையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து யாழ். தீவகப் பகுதியான  அனலைதீவிலும் விரைவில் பொலிஸ் நிலையமொன்று அமைக்கப்படவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .