2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

காலம்கடந்த உணவுப் பொருட்கள் கண்டுபிடித்து அழிப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணத்தின் சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் பகுதிகளிலுள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவான  காலம் கடந்த உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுசுகாதார பரிசோதகர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டுள்ளதாக உடுவில்  பிரதேசசபைத் தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

சுன்னாகத்தில் 4 கடைகளிலும்  மருதனார்மடத்தில் 2 கடைகளிலும் காலம் கடந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தன்னிடம் அறிவித்ததாகவும் இது தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு குறிப்பிட்ட கடைகளில்  சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்  வலி. தெற்கு உடுவில்  பிரதேசசபை தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கடைகளிலிருந்து காலம் கடந்த உணவுப்பொருட்களான குழந்தைகளின் பால்மா வகைகள், கண்டோஸ் வகைகள், இனிப்பு வகைகள், மீன்ரின், சோடா வகைகள், கோதுமை மா உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும்  அவர் கூறினார்.

இவ்வாறு காலம் கடந்த பொருட்களை இனிமேலும் விற்பனைக்கு வைக்கப்படுமாகவிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X