Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் மத்தியஸ்தர்சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீதியமைச்சினால் தெரிவுசெய்யப்பட்ட 27 பேருக்கு மத்தியஸ்தர்சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 10 பெண்களும் 17 ஆண்களும் மத்தியஸ்தர்சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
மத்தியஸ்தர்சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்ட இவர்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
நிர்வாக கிராம அலுவலகர் நா.நவரத்தினராசா தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச செயலாளர் கே.பிரபாகரமூர்த்தி, கணக்காளர் எஸ்.லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
49 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
55 minute ago
2 hours ago