Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
யாழ்ப்பாணம், வலி. தெற்கு உடுவில் பிரதேச சபையினால் திண்மக் கழிவுகளை அகற்றுதல், அதனைத் தரம் பிரித்தல், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் சம்பந்தமான கருத்தரங்கு தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி, கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாலயம், சுன்னாகம் மயிலணி சைவ மகாஜனா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இக்கருத்தரங்கில் கலந்துகொண்டன.
திண்மக்கழிவுகளை தரம் பிரித்தல் சம்பந்தமாக செயல் முறையுடன் கூடிய விளக்கங்களும் செய்துகாட்டப்பட்டன. இக்கருத்தரங்க முடிவில் திண்மக் கழிவுகளை உரிய முறையில் தெரிவுசெய்து கழிவுப்பொருட்களை உரிய பெட்டிகளில் போடக்கூடிய வகையிலான பெட்டிகளும் தவிசாளரினால் வழங்கப்பட்டன.
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago