Menaka Mookandi / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ்.மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் தங்களுக்கு நிரந்தர நியமனங்கள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை இன்று புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் கையளித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமைக் காரியாலய இணைப்பாளர் ஏ.கே.சுந்தரனிடம் யாழ்.மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுகிர்தன் கையளித்ததுடன் தங்களின் நிரந்தர நியமனத்தில் அரசு தலையிட்டு உடனடியாக தங்கள் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை தமது ஜனநாயக ரீதியான போராட்டத்தை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரிய சங்கத் தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago