Kogilavani / 2011 டிசெம்பர் 21 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், 23ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி ஆகிய இடங்களிலும்
24,14,16 அகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப் பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025