2025 மே 17, சனிக்கிழமை

பெண்கள் விடையத்தில் ஊடகங்கள் சமூக பொறுப்போடு செயற்பட வேண்டும்: இமெல்டா

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்கின்ற அதேவேளை பெண்கள் விடையத்தில் சமூகப் பொறுப்போடு செயற்படவேண்டும் என யாழ்.மாவட்ட அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

தியாகி அறங்கொடை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்கள் வன்முறை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கின்போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ்.குடாநாட்டில் பெண்கள் மீது வன்முறை அதிகரித்துச் செல்லுகின்றதைச் செல்கின்ற என்மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

பண்பாடான எமது சமூகத்தில் பண்பாட்டுக்கு விரோதமான முறையில் பல செயற்பாடுகள் நடைபெறுகின்றன அதைத் தட்டிக் கேட்டால் சமூகம் ஏற்றுக்கொள்கிறது இல்லை. இந்த நிலை மாறவேண்டும் மற்றப்பட வேண்டும்.

பெண்கள் மீதான வன்முறைக்கு காரணமானவர்கள் பெண்களாகத்தான் இருப்பதாகவும் குடும்ப வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேவை விரைவில் ஏற்படுத்தப்படும்.

யாழ். சமூகம் கட்டுக் கோப்பான சமூகமாக இருந்து வருகிறது. அதைச் சீரழிப்பதற்கு ஊடகங்கள் சில செயற்படுவதாகவும் இந்த ஊடகங்கள் சமூகப் பொறுப்போடு செயற்பட்டு எதிர்கால சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .