2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ் விடுதிகள் உடனடியாக பதியப்பட வேண்டும்: மாநாகர முதல்வர்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழின் கலாச்சரப் பிறழ்வு நிலையை இல்லாமல் செய்வதற்காக யாழில் உள்ள விடுதிகளை உடனடியாக பதிவு செய்து கொள்ளும் படியும் தரமான முறையிலும் சுகாதாரமான முறையில் விடுதிகள் பேணப்பட வேண்டும் என யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட விடுதிகளை பதிவு செய்வது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய மாநாகர முதல்வர்,

கடந்த சில நாட்களாக யாழ் நகரில் இடம்பெற்று வந்த கலாசாரத்தை இழிவுபடுத்தும் சில செயற்பாடுகள் காரணமாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தேவை யாழ் மாநகர சபைக்கு உள்ளது. எனவே எமது கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் நோக்குடன் நாம் செயற்படுவதற்கு விடுதிகளின் செயற்பாடுகள் முக்கியமானதாக அமைகின்றது.

அந்தவகையில் எமது கலாசாரத்தை சீர்படுத்தும் நோக்குடன் சில இறுக்கமான நடைமுறைகளை மேற்கொள்ளுவது அவசியமாக உள்ளது. எனவே அதற்கான வழிமுறைகளை உரியமுறையில் மேற்கொள்வதற்கு விடுதிகளின் உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு யாழ் மாநகரசபையால் முன்னெடுக்கப்பட்டது என மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரி.இந்திரன், மாநகர ஆணையாளர், பிரதம பொதுச்சுகாதார பரிசோதகர், சுற்றுசசூ10ழல் அதிகாரி, நகர அபிவித்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுச்சுகாதார பரிசேதகர்கள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X