2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ். மாநகர சபை உறுப்பினர் மங்கள நேசன் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்

Super User   / 2011 டிசெம்பர் 22 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகர சபையின் உறுப்பினரும் அண்மையில் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவருமான மனுவல் மங்கள நேசன் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

குறித்த தாக்குதலினால் படுகாயமடைந்த மங்கள நேசன் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். நாவலர் வீதி மற்றும் கஸ்தூரியார் வீதி ஆகியவற்றின் சந்தி பகுதியில்  வைத்து மூன்று மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த கும்பலொன்றே தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • satha Friday, 23 December 2011 08:07 AM

    உள்வீட்டு பிரச்சனை?


    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X