2025 மே 17, சனிக்கிழமை

கடும் குளிரால் மீனவர் மரணம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். குருநகர் இறங்குதுறையில் கடற்றொழிலுக்காகச்  சென்ற மீனவரொருவர் கடும் குளிர் காரணமாக மரணமடைந்துள்ளார். இவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை குருநகர் இறங்குதுறை கரையோரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான அருளப்பு மரியநாயகம் (வயது 73) என்ற மீனவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறித்த மீனவர் கடும் குளிர் காரணமாக வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக இவருடன் சென்ற ஏனைய இரு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .