2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

விபசார குற்றச்சாட்டில் கைதானவர்களில் மூவருக்கு பிணை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் விடுதி உரிமையாளர் உட்பட மூவர் யாழ். நீதிமன்றத்தினால் நேற்று வியாழக்கிழமை  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூவரும் தலா 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 2 இலட்சம் ரூபா சரிரப் பிணையிலும் செல்வதற்கு யாழ். நீதிமன்ற நீதவான் ஆ.ஆனந்தராஜா அனுமதியளித்துள்ளார்.

கடந்த நவம்பர் 13ஆம் திகதி யாழ். விடுதியொன்றில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது விபசாரத்தில் ஈடுபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் விடுதி உரிமையாளர், விடுதி முகாமையாளர், முச்சக்கரவண்டி சாரதி ஆகியோரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X