2025 மே 17, சனிக்கிழமை

நீர்வேலி 'இரட்டைக்கொலை வழக்கின் சந்தேகநபர்' கைது

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 23 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நீர்வேலிப் பகுதியில் கணவன், மனைவி ஆகிய இருவரையும் வெட்டிப் படுகொலை செய்த சந்தேக நபரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ். நீர்வேலிப் பகுதியில் காணிப் பிரச்சினை காரணமாக கணவன், மனைவி ஆகிய இருவரும் அவர்களின் உறவினரெனத் தெரிவிக்கப்படும் ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் பெற்றோரான மார்க்கண்டு உதயகுமார் (வயது 55), அவரது மனைவி வசந்தமலர் (வயது 45) ஆகியோரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த 'இரட்டைக்கொலை வழக்கின் சந்தேகநபர்;' - இரகசியப்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதுடைய அருணாச்சலம் குணேஸ்வரநாதன் என்பவரே கோப்பாய் பொலிஸாரினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ். நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது – எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

'இரட்டைக்கொலை வழக்கின் சந்தேகநபர்' தற்சமயம் யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .