2025 மே 17, சனிக்கிழமை

நாகப்பட்டின மீனவர்கள் அறுவர் வடமராட்சியில் கரையொதுங்கினர்

Kogilavani   / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

இந்திய நாகப்பட்டிண மீனவர்கள் ஆறு பேர் கடந்த ஆறு நாட்களாக கடலில் தத்தளித்த நிலையில் இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கியுள்ளார்கள்.

கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டிணத்தில் இருந்து அளடி 1054 ஆம் இலக்க றோலர் படகில் மீன்பிடிப்பதற்காக புறப்பட்ட இவர்கள் நடுக்கடலில் படகின் இயந்திரம்  பழுதடைந்த நிலையில் தத்தளித்தனர்.

இன்று அதிகாலை கடல் நீரினால் இழுத்துவரப்பட்ட இவர்கள் வடமராட்சி ஆழியவளை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் இவர்களை கைது செய்து மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.

இவர்கள் வந்த றோலர் படகு  தற்போது ஆழியவளை இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • PUTTALA MANITHAN Sunday, 25 December 2011 09:25 AM

    ஆமா இவங்களை என்ன செய்யும் இலங்கை அரசு? எல்லை தாண்டி வந்தவர்கள் என்று ஜெயிலில் அடைக்குமா ? அல்லது மனிதாபிமான முறையில் விடுதலை செய்யுமா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .