2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'யாழில் தேசிய அனர்த்த முகாமைத்துவத்தின் திறன்கள் போதுமானதாக இல்லை'

Kogilavani   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழில் தேசிய அனர்த்த முகாமைத்துவத்தின் திறன்கள் போதுமானதாக இல்லை. அனர்த்தங்களை முகாமைத்துவப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலளர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தினம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் அவர்

யாழில்  சரியான முறையில் முன்னெச்சரிக்கை செய்யப்படுமானால் 24 மணிநேரத்திற்குள் யாழ்.மக்களை இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க முடியும்.

தீ, வெள்ளப் பெருக்கு, சூறாவழி, சுனாமி போன்ற அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பதற்கு விசேட செயற்திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

யாழ்ப்பாணத்தில் அனர்த்தத்திற்கு முன்னரான முன்னேற்ற செயற்திட்டங்கள் திட்டமிட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.

யாழில் இயற்கை அனர்தத்ங்களைவிட மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களே பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சூழலுக்கு மனிதன் தீங்கு செய்கின்றான். அதன் காரணமாக சூழல் அவனுக்கு தீங்கு செய்கிறது என்றார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ். ரவி, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க, கணக்களர், திட்டமிடல் அதிகாரி மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X