2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கீரிமலை மயானம் இன்று முதல் பொதுமக்களின் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ந.பரமேஸ்வரன்)

வலிகாமம் வடக்கிலுள்ள கீரிமலை மயானத்தை பாவனைக்கு விடுமாறு கோரி பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் அம்மயானம் பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

கீரிமலை மயானத்தை பாவனைக்கு விடுமாறு கோரி கீரிமலைச் சந்தியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் மரணமடைந்த ஒருவரின் சடலத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கீரிமலை மயானம் பாவனைக்கு விடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த சடலம் அம்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


  Comments - 0

  • neethan Tuesday, 27 December 2011 10:40 PM

    சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்யாதிருந்தால், மயானம் பொதுமக்களின் பாவனைக்கு கிடையாது போய் இருக்குமோ? நல்லிணக்கம் என்பது எட்டா கனியாகி விடுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X