Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் தங்களை ரோலரில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டுமென்பதுடன் தங்களது ரோலர்ப் படகுகளிலிருந்த கடற்றொழில் உபகரணங்களை யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்களம் கையகப்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று புதன்கிழமை யாழ். நீரியல்வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வல்வெல்ட்டித்துறையிலிருந்து மூன்று பஸ்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்றொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து நீரியல்வளத்துறைப் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரனுடன் பேச்சுவாத்தையில் ஈடுபட்டார்.
'தென்பகுதி கடற்றொழிலாளர்கள் ரோலர் செய்யும்போது நாங்கள் ஏன் செய்யமுடியாதெனவும் ஏன் எங்களை மட்டும் ரோலர் செய்யவிடாமல் தடுக்கின்றீர்கள், முன்னறிவித்தலின்றி எங்கள் ரோலர் கடற்றொழில் உபகரணங்களை பறிமுதல் செய்கின்றீர்கள், தென்பகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? என கடற்றொழிலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
கடற்றொழிலாளர்களின் இந்த முற்றுகைப் போராட்டத்தினால் அலுவலகப் பணிகள் தடைப்பட்டன.
இறுதியாக கடற்றொழிலாளர்களினால் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரும் யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
42 minute ago
1 hours ago
4 hours ago