2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'2012ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் போதைப்பொருளை ஒழிக்க நடவடிக்கை'

Super User   / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக 2012ஆம் ஆண்டு முதல் விசேட செயற்திட்டமொன்றை யாழ். பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலமை பொறுப்பதிகாரி சமன் சிகேர தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பாக பல தகவல்கள் கிடைத்துள்ளன. போதைப் பொருட்கள் யாழில் புழக்கத்தில் இருப்பதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பொலிஸ் கண்காணிப்புக்கள் விரிவுபடுத்தப்படவுள்ளது

போதைப்பொருட்கள் கடல் வழியாக கடத்தப்படுவதாக சில தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் கடல் வலயங்களைக் கண்காணிப்பதற்கு கடற்படை செயற்படுகின்றனர். வேறு வழிகளில் யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X