2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பண மோசடியில் ஈடுபட்ட நீர்கொழும்பு முகவர் யாழில் கைது

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 02 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டின் பேரில்  நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவர் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் யாழ். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த இளைஞரொருவரை கனடாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி அவரிடம் 3 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.    

கைதுசெய்யப்பட்ட நபர் யாழ். இளைஞர்களை கனடாவுக்கு அனுப்பிவைக்கும் முகவராக செயற்பட்டு வந்ததாகவும் இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.


  Comments - 0

  • suthan Monday, 02 January 2012 08:31 PM

    பட்டும் அறிவு வராதவர்களை என்ன செய்வது? குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்கள் இருக்கும் வரைக்கும் இந்த செய்திகளுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X