2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கீரிமலை செம்மண்காடு மயானத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக புகார்

Super User   / 2012 ஜனவரி 02 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். கீரிமலை செம்மண்காடு மயானத்திற்கு செல்வதற்கு கடற் படையினரால் மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கீரிமலை, செம்மண்காடு கடற்கரையால் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாதையை கடற்கடையினர் மீண்டும் முட்கம்பி போட்டு மூடியுள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்

கடந்த புதன்கிழமை வலி. வடக்கு பகுதியில் மரணமடைந்தவரின் சடலத்தை, கீரிமலை, செம்மண்காடு மயானத்தில் தகனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து திறந்துவிடப்பட்டது.

இந்த மயானத்தை பயன்படுத்துவதற்கு கடற் படையினரால் அனுமதி வழங்கப்பட்டு மீண்டும் மறுக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X