2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

டெங்கு நோயால் மாணவன் பலி

Super User   / 2012 ஜனவரி 02 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மத்திய கல்லூரியின் உயர் தர பிரிவின் வர்த்தக துறையில் கல்வி கற்கும் மாணவன் டெங்கு நோயின் காரணமாக இன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் டெங்கு நோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது

கிளிநொச்சி முறிப்பு பகுதியை சேர்ந்த 17 வயதான புஸ்பராசா பிரவினன் என்ற மாணவனே டெங்கு நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளவராவர்

இவரது சடலம் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை டெங்கு நோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X