2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

புதிய சிறைச்சாலைக்கான கட்டிட நிர்மாணப் பணிகள்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 08 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலைக்கான கட்டிட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம்.செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

சுமார் 2,000 கைதிகளைத் தடுத்து வைக்கக்கூடிய வகையில் நவீன வசதிகளை கொண்டதாக இந்த புதிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான அடிக்கல் திரைநீக்கம் ஏற்கெனவே செய்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2013ஆம் ஆண்டில் இச்சிறைச்சாலைக்கான கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படுமெனவும் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம்.செனரத் பண்டார குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X