2025 மே 17, சனிக்கிழமை

யாழில் வேகமாகப் பரவும் 'தைபஸ்' உண்ணிக் காய்ச்சல்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 09 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் 'தைபஸ்' என்னும் உண்ணிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த டிசெம்பர் மாதத்தில் மாத்திரம் 57 பேருக்கு இந்த  நோய்த்தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,  101 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கிடைத்திருப்பதாகவும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

2012 ஜனவரி முதல் வாரத்தில் 17 பேர் தைபஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 40 பேர் இந்த நோய்தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சண்டிலிப்பாய், உடுவில் ஆகிய பகுதிகளில்; இந்த தைபஸ் காய்ச்சல் காரணமாக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் தொற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு விசேட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .