2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 10 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மானிப்பாய் வைத்தீஸ்வரா சந்தியில்  அமைந்துள்ள தனியார் விடுதியொன்றிலுள்ள கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

மானிப்பாயைச் சேர்ந்த லான்ஸ்மாஸ்ரர் சாரதியான யூட்டன் (வயது 30) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஐந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X