2025 மே 17, சனிக்கிழமை

யாழில் தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 10 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கையின் பல பாகங்களிலும் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வரும் அதேவேளை, யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு நோய் தற்போது தீவிரமாகப் பரவி வருகிறது. இதனையொட்டி தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் நாடெங்கிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர்களின் தலைமையில் பிரதேச மட்ட நுளம்புக் கட்டுப்பாட்டுக் குழுக்கூட்டங்கள் நாளை 11ஆம் திகதி அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இடம்பெறவுள்ளன.

தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தில் 12 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் ஏழு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு  ஒவ்வொரு வலயத்துக்கும்; ஒவ்வொரு நாளாக 16ஆம் திகதி முதல் 22அம் திகதி வரையான ஏழு நாட்களிலும் ஏழு வலையங்களிலும் அந்தந்தப் பிரதேச வளங்களனைத்தையும் ஒன்றிணைத்து நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வீடுகள், நிறுவனங்கள், பொது இடங்கள், பராமரிப்பற்ற இடங்கள் போன்றவற்றில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வார செயற்பாடுகளில் சகல அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், பொது அமைப்புகள், பொது மக்கள், பொலிஸ், பாதுகாப்புப் படையினர் ஆகியோரை பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .