2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். மாநகர சபை உறுப்பினர் மீது வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்

Super User   / 2012 ஜனவரி 11 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினராக முருகையா கோமான் மீது வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

மனுதாரரான முருகையா கோமகன் (வயது 29) தற்போது கொழும்பு தடுப்பு காவல் சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்.

நண்பர் ஒருவர் ஊடாக சமூக சேவைகள் அமைச்சருக்கு அறிமுகமாகிய மனுதாரர், பின்னர் சமூக சேவை அமைச்சில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

இதனையடுத்து இவர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் யாழ். மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றார்.

பின்னர், 2010 ஆகஸட் 23ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மூவரினால் தான் கைது செய்யப்பட்டதாக அவர் மனுவில் கூறியுள்ளார்.

தன் மீது பயங்கரவாத செயல்ளுக்கு துணை போனதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

புலனாய்வு பிரிவினர், தடுப்பு காவில் வைத்து தன்னை தாக்கியதாகவும் தனக்கும் எல்.ரி.ரி.ஈக்கும் இடையில் தொடர்பு இருந்ததென ஒத்துக்கொள்ளும் படி கேட்டு நெருக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மனுதாரர் தனது உரிமைகள் பல மீறப்பட்டதாகவும் எதேச்சாதிகார முறையில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முறையிட்டுள்ளார். இவர் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இன்று புதன்கிழமை சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.


  Comments - 0

  • Mohammed Hiraz Thursday, 12 January 2012 02:47 AM

    இன்னும் தொடர்கதையா??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X