2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'பெரியபுராணம் காட்டும் வாழ்வியல்' கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 17 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

'பெரியபுராணம் காட்டும் வாழ்வியல்' என்ற தலைப்பில் கருத்தரங்கும் கருத்தாடலும் மீண்டும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகித் தொடர் நிகழ்வாக நடைபெறவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் (தியாகி அறக்கட்டளை முன்பாக) யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன் தலைமையில் கருத்தரங்கும் கருத்தாடலும் நடைபெறவுள்ளது.

சுதுமலை புகழ் கல்வி நிறுவன ஆதரவுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தொடக்கவுரையை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் வழங்குவார். 'திருநாவுக்கரசு நாயனார் புராணக் கட்டமைப்பு' என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் சுகந்தினி ஸ்ரீமுரளிதரனும் 'திருநாவுக்கரசு நாயனாரின் சமயப் பணிகள் என்ற தலைப்பில் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆசிரியர் ந.சத்தியவேந்தனும் கருத்துரை வழங்குவர்.

சபையோரின் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன், சரவணை நாகேஸ்வரி, வித்தியாலய ஆசிரியர் கு.பாலசண்முகன், சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் ஆகியோர் கருத்தாடல் இணைப்பாளர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

இளைய சமூகத்தினருக்குச் சமயக் கருத்துக்கள் மீதான ஆர்வத்தை ஊட்டும் வகையிலும் உயர்தரம் மற்றும் பட்டப்படிப்புக்களைத் தொடரும் மாணவர்களுக்கு பொருத்தமான வகையிலும் இக்கருத்தரங்கு அமைக்கப்பட்டுள்ளதாக இதன் ஒழுங்கமைப்பாளர்களான பேராசிரியர் அ.சண்முகதாஸ் மற்றும் விரிவுரையாளர் ச.லலீசன் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X