2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அரசியல் கைதிகள் இருவர் யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுவிப்பு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 17 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி மத்தி, கரவெட்டியை சேர்ந்த இராண்ஐயந்திரன் நிருந்தன் என்பவரை 2008ஆம் ஆண்டு மார்கழி மாதம் 01ஆம் திகதி கொழும்பு துறைமுகப் பொலிஸார் கைது செய்தனர். குறித்த நபர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி அமைப்பில் பயிற்சி பெற்றதுடன் வரைபடப் பயிற்சி பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

எனினும் விசாரணைகள் ஏதும் நடைபெறாது இருந்த நிலையில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மேற்படி மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, குறித்த நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்க முடியாத நிலையில் அவர்மீதான குற்றப்பத்திரத்தை சட்டமா அதிர் வாபஸ் பெறுவதாக அரச சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த சந்தேக நபரை விடுவிக்குமாறு யாழ் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அத்துடன் இவர்மீது சுமத்தப்பட்ட மேலும் இவர்மீது சுமத்தப்பட்ட 3 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு இவர் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை மட்டக்களப்பு கல்குடாவைச் சேர்ந்த ஆறுமுகம் ஜெகதீஸ் என்பவர் கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி வவுனியா புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்து இலங்கை இராணுவம் மீது மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவர் மீதான வழக்குகள்  தொடரப்பட்டிருந்த போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டிருந்தது. குற்றப் பகிர்வு பத்திரம் வாபஸ் பெறுவதாக அரச சட்டத்தரணி அறிவித்ததை ஆடுத்து அவரை விடுவிப்பவதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அறிவித்தது. குறித்த நபர் அநுராதபுரச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் அவரை விடுவிக்குமாறு மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X