2025 மே 17, சனிக்கிழமை

பிள்ளையை பாடசாலையில் சேர்க்க மறுத்ததினால் அதிபருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 18 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

தரம் ஒன்றுக்கு தனது பிள்ளையை பாடசாலையில் சேர்க்க மறுத்ததினால் பாடசாலை அதிபருக்கு எதிராக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ்.நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு தனது பிள்ளையை தரம் ஒன்றுக்கு சேர்ப்பதற்கான விண்ணப்பம் தரப்பட்டு சேர்க்கச் சென்றவேளை அப்பாடசாலை அதிபரினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தனது பிள்ளையின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த பாடசாலைக்கு எதிராக அடிப்படை மனித உரிமையான பிள்ளைகளின் சுதந்திரக் கல்விக்காக குறித்த மாணவனின் தாயர் ச.ஜெயராணி முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டில் தனது இருபிள்ளைகள் இதே பாடசாலையில் தரம் 4 இலும் தரம் 2 இலும் கல்வி கற்பதாகவும் தங்களுக்கு இந்தப்பாடசாலையில் முதலில் தரம் ஒன்றில் சேர்ப்பதற்கு அனுமதி தரப்பட்டு பின்னர் அந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதே பாடசாலையில் கல்வி கற்பதற்கு நடடிக்கை எடுக்கும்படி அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு சமர்ப்பித்த முறைப்பாட்டின் பிரதி சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கும் வடமாகாண கல்வி அமைச்சிற்கும் மற்றும் கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .