2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். நகருக்கான குடிநீர் வழமைக்கு திரும்பும்

Super User   / 2012 ஜனவரி 18 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். திருநெல்வேலியில் இருந்து யாழ். நகர பகுதிக்கு நீர் விநியேகம் செய்யும் 06 அங்குல சுற்றளவுள்ள நீர் குழாயில் கந்தர்மட சந்திக்கு அருகாமையில் இன்று புதன்கிழமை காலை பாரிய வெடிப்பு ஏற்பட்டதையடுத்து திருத்தும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாநாகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்

இக்குழாய் உடனடியாக மாற்றப்படாவிட்டால் யாழ் நகரப் பகுதிக்கான நீர் விநியோகம் தடைப்படும் என்பதையும் குடிநீருக்கான குழாய் நீரையே நம்பியிருக்கும் பெரும் தொகையான மக்கள் குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலை, யாழ் நகர குடிமக்கள் பாதிப்படைவார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு உடனடியாக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தனது பணிப்பின் பேரில் யாழ். மாநகர சபை நீர் வேலை பகுதி தலைமையில் மாநகர சபை தொழிலாளர் குழுவொன்று உடனடியாக திருத்த வேலையில் ஈடுபட்டு குழாயை சீர்செய்ததன் காரணமாக இன்று மாலை நகர பகுதிக்கான குடிநீர் விநியோகம் சீரடைந்து வழமைக்கு திரும்பும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X