Menaka Mookandi / 2012 ஜனவரி 20 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வர்த்தக சமூகம் தங்களுடைய வர்த்தகத்தை மேம்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாது மக்களுடைய தேவைகளையும் அவர்களின் கடமைகளையும் உணர்ந்து செயற்பட வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
'எங்களுடைய அரசு வர்த்தக நடவடிக்கைகளுக்கு அப்பால் 1000 கோடி ரூபாக்களை உலக வங்கியோடு இணைந்து மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல அபிவி;ருத்தித் திட்டங்களை செய்து வருகிறது.
யாழ்ப்பாண வர்த்தகக் கண்காட்சியில் நாம் அனைவரும் ஒன்றினைந்துள்ளோம். இலங்கை இந்திய உறவுகளை பலப்படுத்தப்பட்டு மக்களின் தேவைகளுக்கு அண்மையில் நம்பிக்கையூட்டுகின்ற செயற்பாடுகள் பல நடைபெற்று இருக்கின்றன.
வர்த்தகர்களின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு கடன் உதவிகளைச் செய்து வருகிறது. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் மேம்படும்' என்றார்.
இந்த யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம், யாழ். வணிகர் சங்கத் தலைவர் எஸ்.பூரணச்சந்திரன், யாழ்.மாநகர முதவல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் வர்த்தகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago