2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தியில் இந்தியா முன்னிலையிலுள்ளது: இந்தியத் துணைத் தூதுவர்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தியில் இலங்கையில் ஏனைய நாடுகளை விட இந்திய அரசாங்கம் முன்னிலையில் நின்று செயற்பட்டு வருவதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான  சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'யாழ்ப்பாணத்தில் பல கோடி ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை இந்திய அரசாங்கம் செய்து வருகின்றது. அத்துடன்,  மக்களின் வர்த்தகத் துறையை மேம்படுத்துவதற்காக பல முதலீடுகளை இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் செய்வதற்கு இந்திய வர்த்தக நிறுவனங்கள் முன்வந்துள்ளன

வர்த்தகர்களின் வணிக மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கம் கடன் உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் வர்த்தக மேம்பாட்டுக்காக பல உதவித்திட்டங்களை இந்திய மேற்கொண்டு வருகின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களின் தன்னம்பிக்கையை இந்திய அரசாங்கம் மதிக்கின்றது. இவர்களுக்கு உதவுவதற்கும் இந்தியா காத்திருக்கிறது.

இந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இந்தியாவின் பிரபல்யமான 40 வர்த்தக நிறுவனங்கள் தங்களது காட்சியறைகளைத் திறந்துவைத்துள்ளன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X