2025 மே 17, சனிக்கிழமை

அப்துல் கலாமின் வருகையால் யாழ். மண் புனிதமடைகிறது: யாழ். அரச அதிபர்

Kogilavani   / 2012 ஜனவரி 21 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வருகையால் யாழ்.மண் புனிதமடைகிறது என யாழ்.மாவட்டச் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இந்திய வங்கி யாழ்.கிளையின் ஒருவருட நிறைவுக் கொண்டாட்டம் இன்று சனிக்கிழமை இந்திய வங்கியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஜனாதிபதிகளில் முதன்மையான அப்துல் கலாம் நாளை மறுதினம் திங்கட்;கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். இவருடைய வருகைக்காக யாழ்.மக்கள் காத்து இருக்கின்றனர்.

எமது தாய் நாடு என்று கூறும் போது நாம் இந்தியாவைத்தான் நினைப்பதுண்டு. எங்கள் தொப்புள் கொடி உறவுகள் அவர்கள்தான். கடந்த கால யுத்தத்தில் நாம் அண்டை நாடான இந்தியாவில்தான் சஞ்சமடைந்தோம். எங்களை இந்தியா வாழவைத்தது.

இந்திய அரசு யாழ்.மக்களின் வாழ்க்கை மேம்மாட்டுக்காக பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மக்களை யுத்த அழிவுகளில் இருந்து மீட்டுள்ளது. இந்திய அரசிற்கும் இந்திய மக்களுக்கும் யாழ்.மக்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்றார்.

இதேவேளை இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய துணை தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவிக்கையில்,

யாழ்.மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்திய அரசு என்றும் உதவக் காத்திருக்கிறது. வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்துவதற்காக முன்மாதிரிக் கிராம அபிவிருத்தித் திட்டங்களை இந்திய வங்கி யாழ்.கிராம மக்களுக்கு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

யாழ்.மக்களின் சமூக மேம்பாட்டுக்காக இந்திய அரசு பல அபிவிருத்தித்திட்டங்களைச் செய்யவுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களை முன்னேற்றமடைந்த சமூகமாக்குவதற்கு இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.


You May Also Like

  Comments - 0

  • avathani Monday, 23 January 2012 03:47 AM

    இந்தியா உங்களை வாழ வைத்தது என்றால் ஏன் இலங்கை அரசின் சம்பளத்தை வாங்குகிறீர்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .