Kogilavani / 2012 ஜனவரி 26 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். மாநகர சபை உறுப்பினரான சுவிகரன் நிஷாந்தன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் திருமதி பற்குணராஜா யோகேஸ்வரி தெரிவித்தார்.
யாழ். மாநகர சபை உறுப்பினரான சுவிகரன் நிஷாந்தன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து கடந்த 23 ஆம் திகதி வர்த்தமாணி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிஷாந்தன் தான் தெரிவு செய்யப்பட்ட கட்சியின் தார்மீகக் கொள்கைக்கு எதிராகவும் யாழ்.சபையின் கொள்கைக்கும் அதன் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயற்படுவதால் அவரை சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு சபை முதல்வரால் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் யாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நிசாந்தனை தேர்தல் ஆணையாளர் நீக்கியுள்ளதாக இன்று வியாழக்கிழமை மாநகர சபையில் முதல்வர் அறிவித்துள்ளார்.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago