Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
பருவத்துக்கு முந்திய இறால்பிடியை தவிர்க்குமாறும் உரிய காலப்பகுதியில் சங்கங்களின் அறிவுறுத்தலைப் பின்பற்றித் தொழிலை ஆரம்பிக்குமாறும் கண்டாவளைப் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவத்துக்கு முந்திய இறால் பிடியினால் உரிய வருவாயைப் பெறமுடியாது என்றும் வளர்ச்சியடையாத இறால் குஞ்சுகள் அப்போது அழிவடையும் அபாயமே ஏற்படும் என்றும் மீனவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்கமளிக்கும் நிகழ்வும் கலந்துரையாடலும் நேற்றுக் காலை கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் நடைபெற்றது.
கரைச்சி வடக்குக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசப் பொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இநத நிகழ்வில் முறைப்படுத்தப்பட்ட வகையில் திட்டமிட்ட இறால் பிடியைப் பின்பற்றுமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆணையிறவுக் கடனீரேரியில் ஆண்டுதோறும் நடைபெறும் பருவகால இறால்பிடியை மேம்படுத்தித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கான வருவாயை அதிகரிப்பதற்கான திட்டமொன்றினை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சும் சிறுகைத்தொழில் பாரம்பரியக்கைத்தொழில் அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு ஆனையிறவு - சுண்டிக்குளம் கடனீரேரியில் சுமார் 28 இலட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த இறால்குஞ்சுகள் வளர்வதற்கான காலப்பகுதியை எட்ட முன்னர் இறால் பிடியில் ஈடுபட்டால் உரிய பலனைப் பெறமுடியாது என இக் கலந்துரையாடலின்போது மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், தொழிலில் ஈடுபடுவோர் முறைப்படி சங்கங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சங்கங்களின் அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், கண்டாவளைப் பிரதேச செயலர் சத்தியசீலன், மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் தவராஜா, மாவட்டக் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி மற்றும் கரைச்சி வடக்குக் கடற்றொழிலாளர் சங்கங்களில் தலைவர்கள் மறறும் பிரதிநிதிகள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025