2025 மே 17, சனிக்கிழமை

யாழில் மலேரியா பரவக்கூடிய சூழ்நிலை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் மீண்டும் மலேரியாநோய் பரவக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என யாழ். மாவட்ட மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி இரத்தினசிங்கம் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இந்தியாவில் இருந்து திரும்புபவர்கள் மற்றும் இந்தியாவுக்கு சுற்றுலா சென்று வருபவர்கள் என்ற பல தரப்பினராலும் இந்நோய் பரவுவதற்கான சூழ்நிலை உள்ளது. அவ்வாறே ஆபிரிக்க நாடுகளுக்கு சுற்றுலா சென்றோ அல்லது வேறு காரணங்களுக்காக சென்றோ திரும்பி வருபவர்கள் மூலமும் மூளை மலேரியா நோய்க்காவிகள் காவப்படலாம். இவ்வாறானவர்கள் மூலம் மீண்டும் நாட்டில் மலேரியாநோய்த் தாக்கம் ஏற்படக்கூடிய  வாய்ப்புக்கள் காணப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

இவ்வாறானவர்களில் சிலர் மலேரியாநோய்த் தாக்கத்திற்கு உள்ளான  நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறானவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகளுக்கு சென்று   தம்மை பரிசோதித்துக்கொள்வது நல்லது எனவும் யாழ். மாவட்ட மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .