Kogilavani / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ்.போதனா வைத்தியசாலை அரச தாதியரகள்; இன்று வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிநேர பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரச தாதியர்களின் 15 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் ஒரு மணிநேரப் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து இந்த பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை அரச தாதியர் சங்க செயலாளர் பி.வி. சிவயோகம் தெரிவித்தார்
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் 28 ஆம் திகதி அனைத்து அரச தாதியர்களும் கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாதியரின் பணிப் பகிஸ்கரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பணிகள் சற்று தாமதமாகியிருந்தன.
.jpg)
.jpg)
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025