2025 மே 17, சனிக்கிழமை

யாழ்.மாநகர சபை ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அவர்களது பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு : மாநகர முதல்வர்

Kogilavani   / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.மாநகர சபை ஊழியர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெறுகின்ற போது அவர்களின் பிள்ளைகளுக்கு யாழ்.மாநகர சபை வேலை கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாநகர முதலவர் திருமதி பற்குணராச யோகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகரசபையின் தொழிலாளர்களின் வருடாந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போNது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ்.மக்களின் தேவைகள் அதிகரித்துச் செல்கின்றன. அவர்களின் வாழ்வியல் முன்னேற்றம் கண்டுள்ளது.

யாழ்.மாநகர எல்லைப்பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு 67 ஆயிரம் மக்கள் இருந்தனர். 2012 ஆம் ஆண்டு 1 இலட்சத்;து 10 ஆயிரம் பேர் உள்ளனர்.

அந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடு மாநாகர முதல்வர் என்றரீதியில் எனக்கு உண்டு' என்றார்.

யாழ்.நகரப்பகுதியில் வீதி அபிவிருத்தி, கட்டிடங்களின் தொகையும் அதிகரித்துச் செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .