Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மீது கல்வீச்சு இடம்பெற்றதாகவும் இதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரியாலை மாம்பழச் சந்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண சாலைக்கு சொந்தமான பஸ் மீதே இனந்தெரியாதோர் கல்வீச்சு மேற்கொண்டதாகவும் இதன்போது பஸ்ஸின் முன்கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
காயமடைந்த பஸ்ஸின் சாரதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago