Menaka Mookandi / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வடமராச்சி, தாளையடி கடற்றொழிலாளர்கள் தங்களுக்கு அரசு வழங்கும் எரிபொருள் மானியம் போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி சாலை மறியிலில் ஈடுபடவுள்ளதாக தாளையடி கடற்றொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கடற்றொழிலாளர்களை அரசு கவனிப்பது இல்லை எனவும் தங்களின் வாழ்வாதார தொழில் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
தங்களால் கடற்றொழில் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் நீரியல் திணைக்களத்தினால் சங்கங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் எரிபொருள் மானியமானது முழுமையாக கடற்றொழில் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் தங்களின் நிலமைகளைக் கருத்தில் கொண்டு எரிபொருள் மானியத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அதிகரிக்கத் தவறும் பட்சத்தில் சாலை மறியிலில் ஈடுபடுவதற்கு சங்கம் முடிவு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025