Menaka Mookandi / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.குடாநாட்டில் மீண்டும் மலேரியாவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'யாழ். குடாநாட்டில் 2012 ஜவனரியில் இருந்து இன்றுவரை 8 பேர் மலேரியா நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 4பேர் இந்தியாவில் பல வருடங்களாக இருந்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பியவர்கள். ஏனையவர்கள் வெளிநாட்டுக்கு போவதற்காக அபிரிக்க நாடுகளில் நின்றுவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தவர்களாவர்.
இதேவேவை யாழ். தீவகப் பகுதியான அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் பகுதியில் மலேரியாவைப் பரப்பும் நோய்க்காவியான நுளம்புகள் அதிகளவில் இனம் காணப்பட்டுள்ளன.
யாழ். குடாநாட்டில் மலேரியாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025