2025 மே 17, சனிக்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடகடல் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு: எஸ்.தவரெட்ணம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில் வடகடல் கடற்றொழிலாளர்கள் கடலில் இறங்கிச் தொழில் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டறவுச் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்தார்.

வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டறவு சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று திங்கள் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விதம் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "எதிர்காலத்தில் வடகடல் கடற்றொழில் சமூகங்கள் இணைந்து இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட வேண்டிய சூழ்நிலைக்கு தங்ளப்படுவார்கள்.

வடபகுதி மீனவர்கள் கடந்த 30 வருடங்களாக சுமந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். அமைதி நிலைக்குப் பின்னரும் அவர்கள் தொழில் செய்ய முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவு தேவை. அப்போதுதான் வடகடல் தொழிலாளர்கள் சுகந்திரமாக தொழில் செய்து தங்கள் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .